திருநள்ளாறு, நெடுங்காடு பகுதி ரேஷன் கடைகளில் தரமற்ற கொண்டக்கடலை, பருப்பு வழங்கியதால் பொதுமக்கள் மறியல்

காரைக்கால், டிச.29: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு தொகுதிகளில் மக்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் பொருட்களான கொண்டக்கடலை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை தரற்றதாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஐந்து மாதத்திற்கு வழங்க வேண்டிய ரேஷன் பொருட்களான கொண்டைக்கடலை மற்றும் துவரம் பருப்பு ஆகியவை அரசு ஊழியர்களை கொண்டு திருநள்ளாறு மற்றும் நெடுங்காடு தொகுதிகளில் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு ஒன்றுக்கு நாலு கிலோ கொண்டைக் கடலையும். ஒரு கிலோ துவரம் பருப்பும் வழங்கப்படுகிறது.

ஆனால் இவை தரமற்று இருப்பதாகவும். காய்ந்து கருகிய கொண்டைக்கடலைகளில் பூச்சி, புழுக்கள் இருப்பதாகவும் துவரம் பருப்பு மாவாக இருப்பதாகவும் அதனை கொடுக்கும்போதும் அதைக்கூட அளவில் குறைத்து கொடுப்பதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தரமற்ற ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருநள்ளாறு பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றில் பருப்பு வழங்கும்போது அது தரமற்ற பருப்பாக இருப்பதாக அங்கு வந்த குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரி தயாளனிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமற்ற பருப்பு வழங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து பருப்பு வழங்கும் இடத்திற்கு நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ சந்திரபிரியங்கா நேரில் சென்று ஆய்வு செய்தார்.

Related Stories:

>