வேளாண் சட்டத்தை திரும்பபெறக்கோரி நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 30 பேர் கைது

நாகை, டிச.29: வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி நாகை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். எஸ்டிபிஐ கட்சி நாகை மாவட்ட தலைவர் பைசல் ரகுமான் தலைமையில் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். விவசாயத்தை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்க கூடாது. டெல்லியில் போராடும் விவசாயிகளை வஞ்சிக்கும் கூடாது என்பன உள்ளிட்ட கோசங்களை எழுப்பியபடி நாகை ரயில் நிலையம் முன் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரயில் நிலையத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து தடையை மீறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக 30 பேரை கைது செய்த போலீசார் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Related Stories:

>