பம்பர் அகற்றப்படாத டிஆர்ஓ கார் நோய் குணமாகாததால் விரக்தி ஜவுளி நிறுவன ெதாழிலாளி தூக்கிட்டு தற்கொலை

கரூர், டிச. 29: கரூர் அருகே நோய் குணமாகாததால் விரக்தியடைந்த வந்த ஜவுளிநிறுவன தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கரூர் மேற்கு பிரதட்சணம் சாலையை சேர்ந்தவர் விஜயதாசன்(35). ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களாக விஷகடி நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், நோயின் தீவிரமும் அதிகமானது.பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், விரக்தியில் இருந்த விஜயதாசன் கடந்த 27ம்தேதி மாலை வீட்டில் யாருமில்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>