×

கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை 136வது ஆண்டுவிழா கரூரில் காந்தி சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை

கரூர், டிச.29: காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழாவினை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கட்சி கொடியேற்றி வைக்கப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் 136ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி உறுப்பினர் சுப்ரமணியன் தலைமையில், ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் இணைந்து கட்சி கொடியை ஏற்றி வைத்து, காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷங்கள் எழுப்பினர். நிகழ்ச்சியில், தாந்தோணி கிழக்கு வட்டார தலைவர் மனோகரன், கரூர் வட்டார தலைவர் ரவிச்சந்திரன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,Gandhi ,Karur ,anniversary ,Congress ,
× RELATED கரூர் காந்தி கிராமத்தில் பராமரிப்பு...