×

சனிப்பெயர்ச்சி விழா கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பெரும்பாக்கம் அமைந்துள்ள, நட்சத்திர கோயிலில் விருட்ச விநாயகர், அசுவனி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திர அதிதேவதைகள். ராகு, கேது, சனீஸ்வர பகவான்கள், ஒரு லட்சம் ருத்ராட்சத்தினால் ஆன அத்தி விருட்ச ருத்ராட்ச லிங்கம், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் என தனித்தனி சன்னதிகள் கொண்டு அருள்பாளித்துவருகின்றனர். மேலும் இத்திருக்கோயிலில் குரு, ராகு கேது, சனி பெயர்ச்சி மற்றும் காணும் பொங்கல் அன்று 108 கோ பூஜை என சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலை 04.49 மணிக்கு சனி பகவான் உத்திராட நட்சத்திரம் தனுசு ராசியிலிருந்து உத்திராட நட்சத்திரம் மகர ராசிக்கு பிரவேசித்தார்;. இதனை முன்னிட்டு இத்திருக்கோயிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாளிக்கும் சனீஸ்வர பகவானுக்கு சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு பரிகார ஹோமங்கள், கலச அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனைகள் என சிறப்பாக நடைபெற்றது. மேலும் பரிகாரம் செய்துக்கொள்ளவேண்டிய நட்சத்திரகாரர்களுக்கான சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது.

பக்தர்கள் முக கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியுடன் கலந்துகொண்டு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மேட்டுபாளையம் கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு நேற்று சனி பெயர்ச்சி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசம் செய்யும் வைபவத்தில் நேற்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

கோயிலில், சிறப்பு அபிஷேகங்கள், மலர் அலங்காரங்கள், ஆராதனைகள் ஆகியவை சிறப்பாக நடைபெற்றன. மேலும், விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மதுராந்தகம் செங்கல்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற பயணிகள் கலந்துகொண்டு சனி பகவானை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிறுவனர் முருகையன் மற்றும் மேட்டுப்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...