×

ஏகாம்பரநாதர் கோயிலில் கற்தூண்கள் மாயம் போலீசார் விசாரணையை முறையாக நடத்தவில்லை: பொதுமக்கள் குற்றச்சாட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் இரட்டை திருமாளிகை வழக்கு சம்பந்தமாக கடந்த 2 தினங்களாக சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் இரட்டை திருமாளிகையில் இருந்த கற்திருமேனிகள், கல்வெட்டுகள், கற்தூண்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆதரவாக, உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும் திருவாச்சி வழக்கு மூடி மறைக்கப்பட்ட நிலையில் நகைபொக்கிஷ அறையிலிருந்து உலோக திருவாச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் மாபெரும் திருப்பமாக உள்ளது .இதை தொடர்ந்து இந்த வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் உயரதிகாரிகள் செயல்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. எனவே, வழக்கு விசாரணை நேர்மையாகவும் முறையாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். வழக்கு விசாரணை நேர்மையாகவும் முறையாகவும் நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : investigation ,
× RELATED கிருஷ்ணகிரி அருகே உள்ள SBI வங்கி ATM-ஐ...