ஈக்காடு கண்டிகை ஊராட்சியில் பாழடைந்து கிடக்கும் அங்கன்வாடி மையம்: இடித்து அகற்ற கோரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈக்காடு கண்டிகை ஊராட்சியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையம் பழுதடைந்து சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் படித்த குழந்தைகள் அதே ஊராட்சியில் உள்ள பழைய தொலைக்காட்சி பெட்டி அறைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மாற்றப்பட்டுவிட்டனர். மேலும், அந்த தொலைக்காட்சிப்பெட்டி அறையும் இடம் போதாததால் அங்கன்வாடி மைய குழந்தைகளை தொலைக்காட்சி பெட்டியின் அறைக்கு வெளியே ரோட்டில் அமர வைத்து பாடம் நடத்தி வந்துள்ளனர். இந்த கட்டிடம் இடிந்து விழுந்து எப்பொழுது விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், இந்த கட்டிடத்தை பயன்படுத்தாமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டு உயிர் பலி ஏற்படுவதற்கு முன் அதிகாரிகள் இந்த கட்டிடத்தை இடித்து அகற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>