×

கல்வராயன்மலையில் சாராய ரெய்டு 7000லி ஊறல், 100லி சாராயம் அழிப்பு

சின்னசேலம், டிச. 28: கல்வராயன்மலைப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ஜியாஉல்ஹக் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதன் மேற்பார்வையில் கச்சிராயபாளையம்  இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் கரியாலூர் சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் சின்னதிருப்பதி, கொடமாத்தி, எட்டரைபட்டி, எழுத்தூர், குரும்பாலூர், தும்பராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் சாராய ரெய்டு செய்தனர்.

அப்போது 3 குழுவினரும் தனித்தனியாக வனப்பகுதி மற்றும் ஓடையில் சாராய ரெய்டு செய்து சுமார் 7000 லிட்டர் சாராய ஊறல் மற்றும் 100லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனர். கல்வராயன்மலையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க கரியாலூர் போலீசார் மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் மலையில் ஓரிரு இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழில் நடப்பதாக தெரிய வருகிறது. இதையடுத்து போலீசார் அவற்றைரெய்டு செய்து அழித்து வருகின்றனர். கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்றல் பெரும் குற்றமாகும். இதையும் மீறி மலையில் யாரேனும் சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுப்பதுடன் குண்டர் சட்டம் பாயும் என்று எஸ்பி ஜியாஉல்ஹக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Alcohol raid ,liter soaking ,
× RELATED வேலூர், குடியாத்தத்தில் சாராய ரெய்டு...