மாணவி மாயம்

விருதுநகர், டிச. 28: விருதுநகர் அருகே ஆனைக்குட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகள் சுவாதிபிரியா(23). அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்துள்ளார். கடந்த 24ம் தேதி கல்லூரிக்கு சென்று மதிப்பெண் சான்றிதழ் வாங்கி வருவதாக கூறி சென்றுள்ளார். கல்லூரிக்கும் செல்லவில்லை, வீட்டிற்கும் திரும்பி வரவில்லை. உறவினர்களிடம் விசாரித்தும் தகவல் கிடைக்கவில்லை. ஆமத்தூர் போலீசில் மாரியப்பன் புகாரில் போலீசார் மாணவியை தேடி வருகின்றனர்.

Related Stories:

>