×

தண்ணீர் தேடி வந்தபோது கிணற்றில் விழுந்த கடமான் சாவு

பழநி, டிச.28: பழநி அருகே 30 அடி ஆழ கிணற்றில் விழுந்து கடமான் உயிரிழந்தது.பழநி அருகே குதிரையாறு அணைப்பகுதியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இத்தோட்டத்தில் உள்ள 30 அடி ஆழ கிணற்றில் 4 வயது ஆண் கடமான் விழுந்து இறந்தது. இதுகுறித்து ஆறுமுகம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் கடமானின் உடலை மீட்டனர். பாப்பம்பட்டி கால்நடை மருத்துவக்குழுவினர் மானின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து வனப்பகுதிக்கு மானின் உடல் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டது. தண்ணீர் தேடி வந்தபோது மான் கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags : Death ,
× RELATED தொழிலாளி அடித்துக் கொலை: எஃப்.ஐ.ஆரில் மருத்துவமனையை சேர்க்க வலியுறுத்தல்