ஒட்டன்சத்திரம், டிச.28: ஒட்டன்சத்திரத்தில் வீட்டு பூச்செடியில் பதுங்கி இருந்த பாம்புகள் பிடிபட்டன. ஒட்டன்சத்திரம் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது வீட்டில் இருந்த பூச்செடியில் கோதுமை நாகபாம்பு மற்றும் கண்ணாடி விரியன் பாம்பு இருந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சண்முகம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் அண்ணாதுரை தலைமையிலான வீரர்கள் பூச்செடியில் இருந்த பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.