×

ஆக்கிரமிப்பை அகற்ற தாசில்தாரிடம் மனு

போடி, டிச. 28: போடி ஜே.கே பட்டி, திருமலாபுரம், நகராட்சி சாந்திவனம், போடி பங்காருசாமி கண்மாய் அருகிலும் சலவைத்தொழிலாளர்கள் சலவைத்துறையாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பங்காருசாமி கண்மாய் அருகில் வடக்குப்பகுதியில் இருந்த சலவைதுறையை கடந்த 10 ஆண்டுகளாக சலவைத்தொழிலாளர்கள் பயன்டுத்தாமல் விட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள தோட்ட நிலங்களோடு சலவைத்துறை இடமும் இணைக்கப்பட்டது. தற்போது அப்பகுதி தென்னை, வாழைதோப்புகளாக மாறி விட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்டுத்தருமாறு போடி தாசில்தார் மணிமாறனிடம் சலவை தொழிலாளர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிப்பதாக வட்டாட்சியர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.

Tags : waiter ,
× RELATED பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய தாசில்தார் உட்பட 2 பேர் கைது