இளம்பெண் தற்கொலை

ஸ்பிக்நகர், டிச.28: தூத்துக்குடி பண்டுகரை கோயில்பிள்ளை நகரைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகள் வாணி(21). திருப்பூரில் உள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் அவர் வேலைக்கு செல்லவில்லை. தற்போது தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் வேலைக்குச் செல்லுமாறு அவரது தந்தை அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தூத்துக்குடி தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>