×

வாகனங்களில் கூடுதல் பம்பர்களை அகற்றாவிடில் அபராதம் கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரிக்கை

தூத்துக்குடி, டிச. 28: தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றாவிடில் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வாகனங்களில் முன்னும் பின்னும் கூடுதலாக பம்பர்கள் பொருத்தப்படுவதால் வாகன விபத்து ஏற்படும் போது ஏர்பேக்குகள் தானாக திறக்கவிடாமல் தடுக்கப்படுவதால் வாகன ஓட்டுநர், மக்களை பாதுகாக்க முடியாத சூழ்நிலை, வாகனத்தின் சேதம் கணிசமான அளவில் குறைக்க இயலாத நிலையும் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு அறிவிக்கையின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வாகனங்கள் வைத்துள்ளவர்கள் உடனடியாக சட்டத்திற்கு புறம்பாக வாகனத்தின் முன்னும் பின்னும் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை நீக்கிடுமாறும் தவறும்பட்சத்தில் போக்குவரத்து, காவல்துறை அதிகாரிகள் மூலம் அபராதம் ரூ.5 ஆயிரம் விதிக்கப்படுவதுடன், பம்பரை நீக்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே தாங்களாகவே முன்வந்து வாகனங்களில் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை அகற்றிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Senthilraj ,
× RELATED தூத்துக்குடி ஆசிரியர் தின விழாவில்...