×

திருச்செந்தூர் திமுகவின் கோட்டையாக திகழும் ஊழல் ஆட்சியாக மாறிய அதிமுகவை வீட்டிற்கு அனுப்பவே கையெழுத்து இயக்கம்

ஆறுமுகநேரி, டிச. 28: திருச்செந்தூர் தொகுதி எப்போதும் திமுகவின் வெற்றிக்கோட்டையாகவே திகழும். ஸ்டாலின் முதல்வராவது உறுதி என ஆறுமுகநேரியில் நடந்த கிராமசபையில் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசினார். ஆறுமுகநேரியில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டம் நடந்தது. ஆறுமுகநேரி நகர செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். மாநில மாணவரணி துணைச் செயலாளர் உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், டாக்டர் சுதானந்தன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ பேசியதாவது, அதிமுக ஆட்சியில் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கும், திருமண உதவித்திட்டத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வரவில்லை. 3 மாதத்தில் தேர்தல் வருகிறது என்பதால் பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதனை திமுக தலைவர் ஸ்டாலின் ரூ.5 ஆயிரமாக வழங்க கோரினார். வருகிற தேர்தலில் திமுக கூட்டணி 220 தொகுதிகளை கைப்பற்றும் என்று நாளிதழ்களின் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு எதிராக செயல்படும் மோடிக்கு ஆதரவாக எடப்பாடி கைகோர்த்துள்ளார். டெல்லியில் 1 கோடி விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆசிரியர், நர்ஸ் நியமனங்களில் ஊழல், கொரோனாவிலும் ஊழல் என ஊழல் ஆட்சியாக மாறிய அதிமுக அரசை வீட்டிற்கு அனுப்ப மக்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டு வருகிறது.

திருச்செந்தூர் தொகுதியில் பல்வேறு இடங்களில் கட்டப்படாமல் இருந்த கோயில்களை கட்டிக் கொடுத்துள்ளேன். இருதய அறுவைச் சிகிச்சைக்காக சுமார் 150 பேருக்கு உதவியுள்ளேன். மருத்துவம், கல்வி உதவி செய்யப்பட்டுள்ளது. புன்னக்காயலை சேர்ந்த 60 ஏழை பெண்களுக்கு திருமண உதவி செய்ததுடன் திருமணத்தையும் நடத்திக் கொடுத்துள்ளேன்.  திருச்செந்தூர் தொகுதி எப்போதும் திமுகவின் வெற்றிக்கோட்டையாக திகழும். திமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தலைவர் ஸ்டாலின் முதல்வராவது உறுதி.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் ஆழ்வை நவீன்குமார், கருங்குளம் இசக்கிபாண்டி, நகர செயலாளர்கள் காயல்பட்டினம் முத்துமுகமது, ஆத்தூர் முருகபெருமாள், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் இளங்கோ, ராஜசேகர், ஓடைசுகு, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், இளைஞரணி செயலாளர் ராமஜெயம், துணை அமைப்பாளர் ஜோதி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபாண்டியன், மகளிர் தொண்டரணி வேலம்மாள், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, மீனவரணி துணை அமைப்பாளர் குணாபாஸ்கர், தொண்டரணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, மகளிரணி துணை அமைப்பாளர் முத்தீஸ்வரி, வக்கீல் பிரிவு தலைவர் கிருபாகரன், வக்கீல் சாத்ராக், பாரிகண்ணன், சோழர்செல்வின், உடந்தை மகராஜன், செந்தூர்பாண்டியன், மோகன், அகஸ்டின், வின்சென்ட், எலிசா, மாரிமுத்து, கோபால், உட்பட பலர் பங்கேற்றனர். தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் 2 ஏடிஎஸ்பிக்கள், 4 டிஎஸ்பிக்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : AIADMK ,home ,stronghold ,
× RELATED உள்துறை அமைச்சர் பதவியை நமச்சிவாயம்...