×

குறுக்குச்சாலையில் எம்ஜிஆர் நினைவு தினம் சின்னப்பன் எம்எல்ஏ மரியாதை

ஓட்டப்பிடாரம், டிச. 28: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மதுரை நான்கு வழிச்சாலையில் குறுக்குச்சாலையில் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் முன்னாள் யூனியன் சேர்மன் காந்தி என்ற காமாட்சி ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்திற்கு சின்னப்பன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி பால்ராஜ், யூனியன் கவுன்சிலர் அரிச்சந்திரன்,  நிர்வாகிகள் கெங்கையா, ஊமத்துரை, ஐயப்பன், முருகேசன், சுப்புராஜ், பெருமாள்சாமி, சத்தியமூர்த்தி, கணேசன் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். குறுக்குச்சாலை அடுத்துள்ள கே.சண்முகபுரம், பசுவந்தனை, எப்போதும்வென்றான், கீழமுடிமண் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எம்ஜிஆர் படத்திற்கு முன்னாள் யூனியன் சேர்மன் காந்தி தலைமையில் அதிமுகவினர் மரியாதை செலுத்தினர்.

Tags : crossroads ,MGR Memorial Day ,
× RELATED நொய்யல் அருகே மது விற்றவர் கைது