×

சாத்தான்குளத்தில் 3421 புகையிலை பாக்கெட் பறிமுதல்

சாத்தான்குளம், டிச.28: சாத்தான்குளம்  பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் மெயின் பஜார் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஜாரில் உள்ள கடைக்கு பின்புறம் உள்ள  குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  80 புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் பாக்கு பாக்கெட்டுகளும் உட்பட  மொத்தம் 3421 பாக்கெட்டுகளை  பறிமுதல் செய்தனர்.  இதுதொடர்பாக சாத்தான்குளத்தைச் சேர்ந்த அந்தோணி பிரசன்னா என்ற ராஜேஷ்(23) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Sathankulam ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...