விவசாய தொழிலாளர் சங்க கூட்டம்

சிவகங்கை, டிச.28:  சிவகங்கையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் தண்டியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணியம்மா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முத்துக்கருப்பன், மாவட்ட பொருளாளர் வேங்கை மற்றும் நிர்வாகிகள் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மாவட்டத்தில் வறுமையில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் பெரும்பாலானோரின் குடும்ப அட்டைகள் முன்னுரிமை அற்றதாக மாற்றப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அனைத்துப் பொருள்களும் வழங்க வேண்டும். சிவகங்கை தாலுகா அழகிச்சிபட்டி, மங்காபட்டி, நாமனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாழக்கூடிய ஏழை மக்கள் வசிக்கும் வீடுகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.  சிவகங்கை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிட மக்களுக்கு மயானம் இல்லாத நிலை, மயானத்துக்கு செல்கிற பாதை இல்லாத நிலைமை இருந்து வருகிறது. எனவே மயானமும், அதற்கான பாதையும் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>