சிவகங்கை, டிச.28: சிவகங்கை அரண்மனைவாசல் முன் மகளிர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலையை அதிகரித்து நடுத்தர மக்கள், ஏழை மக்களை பாதிக்க செய்யும் மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக கேஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெறக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவி ஏலம்மாள் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ஸ்ரீவித்யாகணபதி முன்னிலை வகித்தார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி கண்டன உரையாற்றினார். முன்னாள் மாவட்டத்தலைவர் ராஜரெத்தினம், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன், மாவட்ட பொருளாளர் பழனியப்பன், மாவட்ட செயலாளர் ரெட்ரோஸ் பழனிச்சாமி, நகர் தலைவர் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தாராணி, வட்டார தலைவர்கள் வேலாயுதம், சோணைமுத்து, மதியழகன், காளீஸ்வரி, முருகானந்தம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.