×

76 கண்மாய்க்கு வழங்கப்பட்ட பெரியாறு கால்வாய் தண்ணீர்

சிவகங்கை, டிச.28:  சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு கால்வாய் நீர் 76 கண்மாய்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசன ஆயக்கட்டு பகுதிகளுக்கு 27.9.2020 அன்று வைகை அணையிலிருந்து மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு 85 ஆயிரத்து 563 ஏக்கர் நிலங்களுக்கு 900 கன அடி வீதம் 120 நாட்களுக்கு நீர் திறக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தின் ஒரு போக ஆயக்கட்டு பெரியாறு நீர் பாசன பகுதி பரப்பான 6038.53 ஏக்கருக்கு கணக்கீட்டின்படி 63.52 கன அடி ஆகும். முதல் 45 நாட்கள் நீர் அளிக்கப்பட்டு வந்த நிலையில் வைகை அணை மற்றும் பெரியாறு அணையின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு 17.11.2020 முதல் 5 நாட்களுக்கு நீர் திறப்பும் மற்றும் 5 நாட்களுக்கு நீர் அடைப்பும் செய்யப்பட்டு வருகிறது. இரண்டாவது முறை பாசனம் 27.11.2020 அன்றும், மூன்றாவது முறை பாசனம் 12.12.2020 அன்றும் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

4வது முறை பாசனத்தில் தற்போது 25.12.2020 அன்று வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டு 26.12.2020 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சீல்டு கால்வாய்க்கு 40கன அடி வீதமும், லெஸ்சிஸ் கால்வாய்க்கு 40கன அடி வீதமும் மற்றும் கட்டாணிபட்டி 2வது மடை  வாய்க்காலுக்கு 5கன அடி வீதம் நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 76 கண்மாய்களுக்கு நீர் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Periyar ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...