வாசுதேவநல்லூர் அருகே கூடலூரில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம்

சிவகிரி, டிச. 28: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடலூர் ஊராட்சியில் ‘அதிமுகவை நிராகரிக்கிறோம்’ என்ற தலைப்பில் திமுக சார்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடந்தது. வர்த்தக அணி மாநில துணைத்தலைவர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன்,கிளைச் செயலாளர் குருசாமி பாண்டியன்  முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணைச்செயலாளர்  மாடசாமி,  வக்கீல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பொன்ராஜ், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் சரவணகுமார், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் மனோகரன்,  இலக்கிய அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துசாமி, ஒன்றிய துணைச்செயலாளர் மாரித்துரை, மாணவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மெடிக்கல் சுந்தர், மகளிர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வி, இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர் மணிகண்டன், தகவல் தொழில்நுட்ப அணி வெள்ள பாண்டி,  வர்த்தக அணி ஒன்றிய துணை அமைப்பாளர் ராஜகுரு,  மாணவர் அணி ஒன்றிய அமைப்பாளர் முத்துகுமார், வேலாயுதபுரம் கிளைச் செயலாளர் லூர்துசாமி. சுப்பிரமணியன், ராமராஜ், முருகேசன், மாடசாமி, வேல்சாமி, முத்துகுமார், கலைவாணன், சாமிதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Stories:

>