நெல்லை மாநகர் மாவட்ட அமமுக 2 ஆக பிரிப்பு புதிய நிர்வாகிகள் நியமனம்

கேடிசி நகர், டிச. 28: அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நெல்லை மாநகர் மாவட்ட கட்சிப் பணிகளை விரைவு படுத்தும் வகையில் நெல்லை மாநகர் மாவட்டம், நெல்லை மாநகர் வடக்கு மாவட்டம் மற்றும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டம் என்று கட்சி அமைப்பு ரீதியாக 2 ஆக பிரிக்கப்படுகிறது. மாநகர் வடக்கு மாவட்டத்தில் நெல்லை, சங்கரன்கோவில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், மாநகர் தெற்கு மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் உள்ளடக்கியிருக்கும். நெல்லை மாநகர் தெற்கு மாவட்ட அமமுக செயலாளராக பாளை தாலுகா பர்கிட்மா நகரைச் சேர்ந்த பரமசிவ ஐயப்பனும், நெல்லை மாநகர் வடக்கு மாவட்ட அமமுக செயலாளராக சிந்துபூந்துறை சுரேஷ்குமாரும் நியமிக்கப்படுகின்றனர்.

Related Stories:

>