- சட்டமன்ற உறுப்பினர்
- அஇஅதிமுக
- மாவட்ட செயலாளர்
- K.V.Kuppam
- அரும்பாக்கம்
- வேலூர் மாவட்டம்
- வேலழகன்
- கிழக்கு யூனியன்
- லோகநாதன்
கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் ஒன்றியம் அரும்பாக்கம் ஊராட்சியில் அதிமுகவின் பாக கிளை நிர்வாகிகள் கூட்டம் கடந்த 12ம் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேலழகன் முன்னிலையில், மாஜி எம்எல்ஏவும் கிழக்கு ஒன்றிய செயலாளருமான லோகநாதன் பேசும்போது, ‘வருகினற 2026 சட்டமன்ற தேர்தலில் காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் ராமு’, எனக்கூறி அவரது பதவிகளை பட்டியலிட்டு பேசினார்.
அதிமுகவை பொறுத்தவரை தேர்தல் நேரத்தில் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேட்பாளரை அறிவிப்பதே நடைமுறை. மாவட்ட செயலாளரை மேடையில் வைத்துக் கொண்டே, பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதியின் வெற்றி வேட்பாளர் என்று மாஜி எம்எல்ஏ பேசியது குறித்தும், அதை மாவட்ட செயலாளரும், பொறுப்பாளர்களும் கண்டிக்காதது குறித்தும் நிர்வாகிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
