×

காவிரி கூட்டு குடிநீர் கிடைப்பதில்லை: மக்கள் சபை கூட்டத்தில் குற்றச்சாட்டு

பரமக்குடி, டிச.28: காவிரி குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்கப்படாத அதிமுக அரசால், குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக கிராமசபை கூட்டத்தில் மக்கள் குற்றம்சாட்டினர். பரமக்குடி மேற்கு ஒன்றிய திமுக சார்பில், மேலப்பெருங்கரை கிராமத்தில் அதிமுகவை நிராகரிப்பும் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன் தலைமை தாங்கினார். போகலூர் ஒன்றிய பொருளாளர் குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரசேகரன் வரவேற்றார். அப்போது, கிராம மக்கள் முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு பஸ்கள் சரியாக இயக்கப்பட வில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப் படாததால் ஏராளமான கிராமங்கள் குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வருகின்றோம். தற்போது, அமைக்கப்பட்டு வரும் சாலைகள் முறையாக போடாததால் தொடர்ந்து பெய்த மழைக்கு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. கிராமங்களில் சுடுகாடு வசதி இல்லை உள்ளிட்ட பல்வேறு புகார்களை தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்து பேசிய போகலூர் ஒன்றிய குழு தலைவர் சத்திய குணசேகரன், திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்தவுடன் உங்களுடைய குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

காவிரி குடிநீர் திட்டம் முறையாக பராமரிக்கப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் தங்கு தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கூறினார். இதில், ஒன்றிய பொருளாளர் பாண்டி, பரமக்குடி சட்டமன்ற தொகுதி ஐடி பிரிவு அமைப்பாளர் ஷேக், ஒன்றிய ஐடி பிரிவு அமைப்பாளர் ஜோசப் ராஜன் ஊராட்சி செயலாளர் சாத்தையா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் கார்த்திக், அரசன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கண்ணன், முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் முத்தரசு உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நயினார்கோவில் மேற்கு ஒன்றியம் சார்பாக எஸ்வி.மங்கலத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் முருகேசன் அதிமுகவை நிராகரிப்போம், திமுகவை ஆதரிப்போம் என்ற கோஷத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுமக்களிடம் ஊராட்சி பகுதியில் உள்ள குறைகளை மனுக்களாக பெற்றார்.

Tags : People's Assembly Meeting ,
× RELATED மக்கள் சபை கூட்டம்: திரளான மக்கள் பங்கேற்பு