நாமக்கல், டிச.28: நாமக்கல் ஒன்றிய அதிமுக சார்பில், வகுரம்பட்டி ஊராட்சி பொன்விழா நகரில் நேற்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு துணைத்தலைவருமான ராஜா(எ) செல்வகுமார் வரவேற்று பேசினார். தேர்தல் பொறுப்பாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ பாஸ்கர் தலைமை வகித்து பேசியதாவது: நாமக்கல் சட்டமன்ற தொகுதி மக்களின் ஆதரவுடன் 2 முறை வெற்றி பெற்றுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொகுதி முழுவதும் செய்து கொடுத்துள்ளேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை(29ம் தேதி) காலை நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பின், முதன்முதலாக நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைக்கிறார்.