கல்லூரி மாணவருக்கு பாராட்டு

காரைக்குடி, டிச.28: காரைக்குடி அருகே அமராவதிபுதூர் ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக தமிழ்நாடு மாநில அளவிலான தரவரிசை பட்டியலில் நான்காம் இடம் பெற்ற மாணவர் சரவண ராமமூர்த்தியை பாராட்டி பரிசு வழங்கும் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் பொன்வாசன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், கல்லூரி ஆலோசகர் பேராசிரியர் சுப்பையா தலைமை வகித்து பேசுகையில், ‘‘ ஒவ்வொரு மாணவரும் குறிக்கோளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குறிக்கோள் இல்லாமல் வெற்றி சாத்தியமே இல்லை. எந்த துறையில் வெற்றி பெற வேண்டும் என்பதை மாணவர்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இக்கல்லூரியில் படித்த 14 மாணவர்கள் மாநில அளவிலான அண்ணா பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். தற்போது மாணவர் சரவணராம மூர்த்தி 4ம் இடம் பெற்றுள்ளது பாராட்டக்கூடியது என்றார். நிகழ்ச்சியில் துறைத்தலைவர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். துணை முதல்வர் மகாலிங்க சுரேஷ் நன்றி கூறினார்.

Related Stories:

>