சனிப்பெயர்ச்சியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி, டிச.28: தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில், சனி பகவான் தனுசுராசியில் இருந்து மகரராசிக்கு பெயர்ச்சி அடைந்ததையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை வழிபட்டனர். இதே போல், அதியமான்கோட்டை காலபைரவர் கோயிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி பக்தர்கள் செருப்பு, குடை வழங்கி பரிகாரம் செய்து வழிப்பட்டனர். தர்மபுரி சாலைவிநாயகர் கோயில், குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணிய கோயிலில் சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதுபோல் தர்மபுரி, பென்னாகாரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும், கோயில்களில் சனிப்பெயர்ச்சி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

Related Stories:

>