×

கே.வி.குப்பம் அருகே ஏரி நிரம்பியதையொட்டி திடீர் சுற்றுலாத்தலமான காவனூர் ஏரி

கே.வி.குப்பம், டிச.28: கே.வி.குப்பம் அருகே ஏரி நிரம்பியதையொட்டி நடைப்பெற்ற ஏரி விழாவில் சுமார் 1000 பேருக்கு கோழிக்கறி விருந்து அளித்து கோலாகலமாக கொண்டாடினர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த அடுத்த காவனூர் பகுதியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது காவனூர் ஏரி. முன்னதாக இந்த ஏரியானது கடந்த 2015ம் ஆண்டு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது. தொடர்ந்து 2017ம் ஆண்டும் நிரம்பி வழிந்தது. தற்போது இந்த ஏரியானது கடந்த மாதம் பெய்த கன மழையால் பள்ளிகொண்டா பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டு பசுமாத்தூர் கால்வாய் மூலம் வந்த உபரி நீரால் கடந்த வாரம் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிந்தது.

சுமார் 488.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கு அடுத்து மாவட்டத்தின் இரண்டாம் பெரிய ஏரி என்ற சிறப்பும் உண்டு. காவனூர் ஏரியில் இருந்து செல்லும் நீர் பாண்டியன் கால்வாய் வழியாக கவசம்பட்டு, முடினாம்பட்டு, கொத்தமங்கலம், திருமணி, ஒய்யாத்தூர் வழியே சென்று மீண்டும் பாலாற்றுக்கு செல்கிறது. இதனால் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம விவசாய நிலங்கள் பயனடைகின்றன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள சுமார் 1000க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு, ஏரி நிரம்பியதை கொண்டாடும் விதமாக பட்டாசுகள் வெடித்தும் அங்கு உள்ள ஏரியம்மன் மற்றும் முருகன் கோயிலில், வழிபாடு செய்தும், நீரை வரவேற்கும் விதமாக மலர்கள் தூவியும், பூஜை செய்தும் வழிபட்டனர்.

இந்த விழாவிற்கு ஏரி திருவிழா என பெயர் வைத்து விழாவை கோலாகலமாக கொண்டாடினர். நிகழ்ச்சியின் போது ஊர் பிரமுகரான தர் தலைமையில் ஏரி நிரம்பி வழிவதை கொண்டாடும் விதமாக ஏரியைக்காண வந்த சுமார் 1000 பேருக்கு கோழிக்கறி விருந்து படைத்தார். ஏரி ழுழு கொள்ளளவு எட்டிய நாளில் இருந்தே காவனூர் உள்ளிட்ட சுற்றுபுற கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரிக்கு தினமும் குடும்பம், குடும்பாய் வந்து செல்கின்றனர். இதனால் ஏரியை சுற்றி போண்டா, பஜ்ஜி, பொரி கடலை, சுண்டல், பானிபூரி, ஜஸ்கிரீம், ஜூஸ், டீ உள்ளிட்ட சிறு வியாபாரிகள் தங்கள் கடைகள் ஆங்காங்கே போட்டுள்ளனர். ஏரியை காண வரும் மக்கள் ஆனந்தாமாய் விளையாடி மகிழ்ந்து, தங்களுக்கு பிடித்த நொறுக்கு தீனிகளை உண்டு மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். இதனால் அப்பகுதி சுற்றுலா தலமாகவும் காட்சியளிக்கிறது.

Tags : Kavanur Lake ,tourist destination ,lake ,KV Kuppam ,
× RELATED குண்ணம் ஊராட்சியில் தனியார்...