ரயில்நிலைய முன்பதிவு மையத்தில் விதி மீறல்: 2 ேபர் சஸ்பெண்ட்

மதுரை, டிச. 28: மதுரை ரயில்நிலைய முன்பதிவு மையத்தில், விதிமீறி கூடுதல் நேரம் முன்பதிவு செய்த விவகாரத்தில், மைய கண்காணிப்பாளர் உள்ளிட்ட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ரயில் நிலையங்களில் உள்ள முன்பதிவு மையங்களில் சுதந்திர தினம், புத்தாண்டு, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட விடுமுறை தினங்களில் பகல் 2 மணி வரை மட்டும் முன்பதிவு செய்யப்படும். இதன்படி மதுரை ரயில் நிலையத்தில் கடந்த 25ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பிற்பகல் 2 மணி வரை மட்டுமே முன்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அது தொடர்பாக அறிவிப்பும் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிற்பகல் 2 மணியையும் கடந்தும் முன்பதிவு நடந்தது. இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் சிலர் புகார் தெரிவித்தனர். இதன்பேரில், அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், முன்பதிவு நேரத்தில் விதிமீறல் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, கிறிஸ்துமஸ் அன்று மதுரை ரயில் நிலைய முன்பதிவு மையத்திலிருந்த அதிகாரி மற்றும் முன்பதிவு மைய கண்காணிப்பாளர் இருவரையும், மதுரை கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Related Stories:

>