×

பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி

 

பேராவூரணி,அக்.14: பேராவூரணியில் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேராவூரணி காவல்துறை, தீயணைப்பு துறை மற்றும் லயன்ஸ் சங்கம் இணைந்து நடத்திய விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி மெயின் ரோடு, சேதுபாவாசத்திரம் ரோடு வழியாக தாசில்தார் அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் அதிக சப்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது, குறிப்பிட்ட நேரங்களில் வெடி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது பேரணியில் லயன்ஸ் சங்க தலைவர் சுப்பிரமணியன் தீயணைப்பு நிலைய அலுவலர் னிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் லயன்ஸ் சங்க செயலாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Accident-free Diwali awareness rally ,Peravoorani ,Diwali ,Peravoorani Police, ,Fire Department ,Lions Club ,Peravoorani New Bus Stand ,Road ,
× RELATED கல்லக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்