ரயில் நிலையத்தை முற்றுகை: 102 பேர் கைது

மதுரை, டிச. 28: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில  ெபாதுச்செயலாளர் அப்துல்சமது தலைமையில், தெற்கு மாவட்டச்செயலாளர் சேக்  இப்ராஹீம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மதுரை  பாண்டி பஜாரிலிருந்து, ரயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர். ரயில் நிலைய நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திலகர் திடல் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக 102 பேரை கைது செய்தனர். ஊர்வலத்தில் வந்தவர்கள், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories:

>