×

வந்தவாசியில் பயிற்சி ஊர்க்காவல் படையினருக்கு புத்தாக்க பயிற்சி

வந்தவாசி, டிச.28: வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலைமீது பயிற்சி ஊர்க்காவல் படையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. வந்தவாசி உட்கோட்டத்தில் சுமார் 50க்கும் அதிகமான ஆயுதப்படை போலீசார் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தங்கவைக்கபட்டுள்ளனர். இவர்களுக்கும், வந்தவாசி உட்கோட்டத்தில் பணிபுரியும் போலீசாருக்கும் சனிக்கிழமை தோறும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பணியில் சேர்ந்தபோது எடுத்த பயிற்சிகளை நினைவு கூறும் வகையில் 45 நிமிடம் பயிற்சி எடுப்பது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம், வழக்கமான பயிற்சிகு மாற்றாக வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள 1,500 அடி உயரம் ெகாண்ட மலை மீது ஏறும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து புதிதாக பணியில் சேர்ந்த 95 பயிற்சி ஊர்க்காவல் படையினரும் மலை மீது ஏறி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது மலையின் மேல் பிளாஸ்டிக் கழிவுகளை 23 சாக்கு பையில் சேகரித்து மலை அடிவாரத்திற்கு கொண்டு வந்தனர். இதில் ஆயுத படை, பயிற்சி ஊர்காவல் படையினரின் சேவையை டிஎஸ்பி பி.தங்கராமன் பாராட்டினார்.

Tags : Vandavasi Innovative ,Kayts ,
× RELATED ஊர்காவல் படையினர் ஊதியத்தை அரசு...