×

கடை வியாபாரிகள் சங்கம் துவக்கம்

பழநி, டிச.28: பழநியில் நகராட்சி கடை வியாபாரிகள் சங்கம் துவக்கப்பட்டுள்ளது. பழநி நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் 400க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இக்கடைக்காரர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கடை வியாபாரிகள் சங்கத்தை துவக்கி உள்ளனர். இச்சங்கத்தின் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் கௌரவத் தலைவராக தொழிலதிபர் சரவணன், தலைவராக வேணுகோபால், செயலாளராக ஜெகதீஸ், பொருளாளராக கமால்தீன், துணைத் தலைவர்களாக சுல்தான், முன்னாள் கவுன்சிலர் சுந்தர், துணைச் செயலாளர்களாக வெங்கடாசலம், மனோஜ்குமார், சட்ட ஆலோசகராக ஆறுமுகம் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் கொரோனா காலத்தில் அரசு அறிவித்த அறிப்பின்படி வாடகை தள்ளுபடி நடவடிக்கையை நகராட்சி உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

Tags : Launch ,Shopkeepers Association ,
× RELATED தனியார் நிறுவன ராக்கெட் ஏவுவதற்கு இஸ்ரோ அனுமதி!!