×

குளச்சல் அருகே விசைப்படகில் இருந்து தவறி விழுந்த சட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்பு

குளச்சல்,டிச. 28: குருந்தன்கோடு அருகே முக்கலம்பாடு பகுதியை சேர்ந்தவர் ஜோசப் மகன்  ஜெரின் ஜோஸ் (27). நெல்லை சட்டக்கல்லூரி இறுதியாண்டு மாணவர். இவரது நண்பர்  குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்த பினு. இவர்கள் நண்பர்கள், உறவினர்கள் 40  பேருடன் கடந்த 25ம்தேதி விசைப்படகில் குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து  கடலுக்கு சென்றனர். பினுவின் அண்ணன் பிண்டோ (32) படகை  இயக்கினார். இவர்கள் சின்னவிளை அருகே 5 நாட்டிக்கல் மைல் தொலைவில்  சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஜெரின் ஜோஸ் தடுமாறி கடலில் விழுந்தார்.

அவரை உடன்  சென்றவர்கள் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து குளச்சல்  மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மரைன் போலீசாரும்  மீனவர்களுடன் இணைந்து ஜெரின் ஜோசை தேடினர். எனினும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 3வது நாளாக  நேற்று காலை தேடும் பணி நடந்தது. அப்போது சின்னவிளை  பகுதியில் ஜெரின்ஜோஸ் சடலமாக மிதந்தார். இதையடுத்து மீனவர்கள் உடலை மீட்டு கரை சேர்த்தனர். மரைன் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு  மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். தொடர்ந்து விசாரித்து  வருகின்றனர்.

Tags : law college student ,Kulachal ,
× RELATED தூத்துக்குடியில் 6 விசைப்படகுகளுடன் 86...