துறையூரில் முதல்வர் பிரசார இடத்தை பார்வையிட்டு திரும்பும்போது திருச்சி மத்திய மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்

திருச்சி, டிச.28: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருச்சி மத்திய மாவட்டத்தில் நாளை (29ம் தேதி) சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி மத்திய மாவட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தையொட்டி நாளை பல்வேறு இடங்களுக்கு சென்று கட்சியினர் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்படி காலை 10 மணியளவில் லால்குடி தொகுதியின் சார்பில் லால்குடி ரவுண்டானா பகுதியில் சுற்றுப்பயணத்தை துவக்குகிறார். தொடர்ந்து வாளாடி பகுதி, ரங்கம் பகுதி சார்பில் ராஜகோபுரம் அருகில், காஜாமலை பகுதி, கிராப்பட்டி பகுதி சார்பில் உழவர்சந்தை அருகில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணியளவில் தென்னூர் ஆழ்வார்தோப்பு இஸ்லாமிய மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

பின்னர் மதியம் 2.30 மணியளவில் தில்லைநகர் பகுதி சார்பில் உய்யக்கொண்டான் பகுதி, மணிகண்டம் ஒன்றியம் சார்பில் சோமரசம்பேட்டை, குழுமணி, அந்தநல்லூர் ஒன்றியம் சார்பில் ஜீயபுரம் என வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இறுதியாக மாலை 5 மணியளவில் கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மேற்கு, ரங்கம், லால்குடி ஆகிய தொகுதியின் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி அனைத்திலும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள், அனைத்து அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிகள், செயல்வீரர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>