×

வேளாளர் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்


திருச்சி, டிச.28: வேளாளர் என்ற பெயரை 7 உட்பிரிவினருக்கு பொதுவான பெயராக தேவேந்திரகுல வேளாளர் என அளிக்க மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யவிருப்பதை கண்டித்து வேளாளர் உரிமை மீட்புக் குழுவினர் சார்பில் நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் ஜெயபால் தலைமை வகித்தார். சோழிய வேளாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் மயில்வாகனம் முன்னிலை வகித்தார். இதில் வேளாளர் முன்னேற்ற கழக மாநில பொதுச் செயலாளர் ஹரிஹரன், நான்கு திசை வேளாளர் சங்கம், ஆறுநாட்டு வேளாளர் சங்கம், அனைத்து முதலியார், பிள்ளைமார் சங்கம், கொங்கு வேளாளர் இளைஞர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பு சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு ஹன்ஸ்ராஜ் கமிஷன் அறிக்கையினை பரிந்துரை செய்யாமல் ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு, மாநில அரசு பரிந்துரை செய்யும் அறிக்கையை நிராகரிக்க வேண்டும். கடந்த ஒரு மாதமாக இரு பிரிவு சமுதாய மக்களும் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தை நடத்துவதை நிறுத்த இந்த கமிஷனின் அறிக்கைகளை மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். வெள்ளாளர், வேளாளர் சமுதாயத்தினரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க மாநில அரசு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் தக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பது அல்லது நோட்டாவிற்கு வாக்களிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

திருச்சி, டிச.28: திருச்சி கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள குடிநீர் உந்து குழாயில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று (28ம் தேதி) ஒரு நாள் மட்டும் திருச்சி மாநகரில் குறிப்பிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்வதில் தடை ஏற்பட்டுள்ளது. அதன்படி பெரிய கடைவீதி, பாபு ரோடு, கீழப்புலிவார்டு ரோடு, ஜாபர்ஜா தெரு, கள்ள தெரு, மேலரண்சாலை, மதுரை ரோடு, நத்தர்ஷா பள்ளிவாசல் தெரு, சிங்காரத்தோப்பு, தாராநல்லூர், ராணி தெரு, பெரிய சவுராஷ்டிரா தெரு, சுண்ணாம்புக்கார தெரு, கம்மாள தெரு, அலங்கநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று ஒரு நாள் மட்டும் குடிநீர் வினியோகம் இருக்காது. இதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். நாளை வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : Demonstration ,organization ,
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...