முத்துப்பேட்டையில் தலைமை ஆசிரியர்களுக்கு மானியம் தொடர்பான கூட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.28: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளி களுக்கு மட்டும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் ஒருங்கிணைந்த பள்ளி மானிய தொகை விடுவிக்கப்பட்டு அது தொடர்பாக அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் புதுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் முருகபாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செலவினங்கள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் ஆகிய விபரங்கள் கூறப்பட்டது. வட்டார ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் பயிற்றுநர் சக்திவிநாயகம் நன்றி கூறினார்.

Related Stories:

>