×

சனிப்பெயர்ச்சி விழா தஞ்சை மூலை அனுமார் கோயிலில் பாலாபிஷேகம், சிறப்பு வழிபாடு

தஞ்சை, டிச.28: சனி பெயர்ச்சியைடுத்து சனி தோசம் போக்கும் தஞ்சாவூர் மேலவீதி மூலை அனுமாருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற சனி தோஷம் போக்கும் மூலை அனுமார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னன் பிரதாப சிம்மானால் கட்டப்பட்டது. தஞ்சையில் அனுமனுக்கு என கட்டப்பட்ட தனிப்பெரும் கோயிலாக மூலை அனுமார் கோயில் விளங்குகிறது. மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூலை அனுமாரின் வாலில் சனீஸ்வரபகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். ராவணனால் சிறைப்பிடிக்கப்பட்ட நவகிரகங்களை தன் பலத்தால் விடுதலை ஆக்கியவர் அனுமார் . இதன் பலனாக தனக்கோ தன் பக்தர்களுக்கோ யாதொரு தீங்கும் செய்யமாட்டோம் என நவகிரகங்களிடம் சத்திய பிரமாணம் பெற்றவர் மூலை அனுமார். இவரை வழிபடுபவர்களுக்கு சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கி ஆற்றலும் மேன்மையும் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் வெற்றியை தரக்கூடியவர் என்பது வரலாறு.

இக்கோயிலை 108 ராம நாமம் ஜெபம் செய்து வலம் வந்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் வேண்டி வழிபடுகின்றார்களோ அவற்றை எல்லாம் பெறலாம். பிரதி அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் எப்பேர்பட்ட கிரக தோஷங்களும் நீங்கி உயிருக்கு ஆபத்தான நோய்களும் குணமாகும் என்பது ஐதீகம். இக்கோயிலில் பக்தர்கள் சனிதோஷம் நீங்க வேண்டி 18 முறை வலம் வந்து சனி தோஷ நிவர்த்தி காணிக்கையாக ரூ.18 யை உண்டியலில் செலுத்தி சிதறு தேங்காய் உடைத்து செல்கின்றனா். ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் மூலை அனுமாருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும். இந்த வருடம் நேற்று காலை 9 மணிக்கு சனி பெயர்ச்சியைடுத்து மூலை அனுமாருக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார சேவை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி அன்று கும்ப ராசிக்கு ஏழரை சனி தொடக்கம் .மகர ராசிக்கு ஜென்ம சனி தொடக்கம்.

தனுசு ராசிக்கு பாதசனி தொடக்கம். முதல் ராசிக்கு அஷ்டமச்சனி தொடக்கம் .கடக ராசிக்கு கண்டகச்சனி தொடக்கம். துலா ராசிக்கு அர்த்தாஷ்டம சனி தொடக்கம் நடைபெற்றது. எனவே மேற்கண்ட ராசிக்காரர்கள் சனி தோசம் போக்கும் மூலை அனுமார் தரிசனம் செய்தால் சனி தோச நிவர்த்தி கிட்டும் என்பதும், தொடர்ந்து அமாவாசைகள் அன்று மூலை அனுமாரை வழிப்பட்டால் எண்ணியவை எண்ணியபடி நடைபெறும் என்பதும் ஐதீகம். இக்கோயில் வாயு மூலையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை மேலவீதியில் உள்ள சங்கரநாராயணர் கோயிலில் வெள்ளி கவசத்தில் சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags : Sacrifice Ceremony Balabhishekam ,Tanjore Corner Anumar Temple ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...