×

சக காவலர்கள் திரட்டி வழங்கினர் லண்டனிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பிய 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தஞ்சை, டிச.28: லண்டனிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பிய 3 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார். தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு சட்டமன்ற தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டார். வாக்கு எண்ணப்படும் அறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு அறை, வாக்குப்பதிவு அறை, விவிபேட் ஆகியவை வைக்கப்படும் பாதுகாப்பு அறை, தேர்தல் பார்வையாளர் அறை, ஊடக அறை, கழிவறை ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை மாவட்டத்தில் வாக்கு எண்ணப்படும் மையங்களில் முதற்கட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் லண்டனிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு திரும்பிய 72 பயணிகள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதில் 53 பேரை பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 3 பேரின் மாதிரிகள் மேல் பரிசோதனைக்காக புனேவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு வல்லம் கொரோனா சிகிச்சை மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிலிருந்து தஞ்சை மாவட்டத்திற்கு வந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துக் கொண்டு தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், கை சுத்திகரிப்பான் பயன்படுத்துதல் போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்றார். ஆய்வின்போது எஸ்.பி.தேஷ்முக் சேகர் சஞ்சய், வருவாய் கோட்ட அலுவலர்கள் தஞ்சை வேலுமணி, கும்பகோணம் விஜயன், தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன், கும்பகோணம் தாசில்தார் கண்ணன், பட்டுக்கோட்டை தாசில்தார் தரணிகா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : guards ,district ,London ,Tanjore ,
× RELATED லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸில் படித்த...