×

கொள்ளிடம் ஆற்றில் நிர்வாணமாக புதைக்கப்பட்ட பெண் சடலம் கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி அடித்து கொலை

திருக்காட்டுப்பள்ளி, டிச 28: கல்லணை அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் பெண் சடலம் ஒன்று புதைக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி காணப்பட்டது. இது குறித்து தோகூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் கணவனே கொலை செய்து புதைத்த விபரம் தெரிய வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் கல்லணை அருகே சுக்காம்பார் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி இயங்கி வந்த இடம் அருகில் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் கடந்த நவம்பர் 10ம் தேதி ஒரு சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜிடம் தெரிவித்தனர். இது குறித்து விஏஓ தோகூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் தோகூர் எஸ்ஐ பாலகிருஷ்ணன், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர் தேவி, திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல் மற்றும் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பூதலூர் தாசில்தார் அருணகிரி முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. இறந்தவர் 25 முதல் 30 வயதுக்குட்ட பெண். உடலில் துணி ஏதுமின்றி நிர்வாணமாக புதைக்கப்பட்டிருந்ததது. இடுப்பு பகுதியில் நீல நிற நைலான் கயறு காணப்பட்டது. முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டிருந்தது. இது குறித்து தஞ்சை எஸ்பி தேஷ்முக்சேகர்சஞ்சை உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கும்பகோணம் அண்ணல்அக்ரஹாரம் தங்கவேல் மகன் முரளி(36) என்பவர் விஏஓ மூலம் தோகூர் காவல்நிலையத்தில் நேற்று (27ம் தேதி) சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருக்கும் அவரது மனைவி ரம்யா(30)விற்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு 8 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கும்பகோணத்தில் கார் வாங்கி தொழில் நடத்துகிறார். வெளிநாடு சென்று திரும்பியுள்ளார். இந்நிலையில் மனைவி ரம்யாவுக்கு கள்ளத்தொடர்பு உள்ளது தெரியவந்தது. பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை. இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ரம்யாவை சுத்தியலால் தாக்கியுள்ளார். இதில் ரம்யா இறந்து விட்டார். தன் காரில் ஏற்றி வந்து கொள்ளிடம் ஆற்றில் புதைத்து விட்டார். மனைவி குறித்து அக்கம்பக்கத்தில் மக்கள் விசாரிக்கவே குற்ற உணர்வு ஏற்பட்டு சரணடைய விஏஓ உதவியை நாடியுள்ளார் என்ற விபரங்கள் தெரியவந்தது. சந்தேகத்திற்குரிய மரணம் என்பதை கொலை வழக்காக மாற்றி திருவையாறு டிஎஸ்பி சித்திரவேல், திருக்காட்டுப்பள்ளி இன்ஸ்பெக்டர்(பொ) முருகேசன் ஆகியோர் முரளியை கைது செய்தனர்.

Tags : death ,Kollidam river ,
× RELATED திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞர் நீரில் மூழ்கி பலி