×

கணவன் ேபாலீசில் சரண் காடுவெட்டி குரு மகன் மீது வன்னியர் சங்க தலைவர் புகார் சொர்ணக்காட்டில் கால்நடை மருத்துவ முகாம்

பேராவூரணி, டிச.28:பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சியில், கால்நடைப் பராமரிப்புத் துறை சார்பில், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். உதவி மருத்துவர்கள் விஜயகுமார்,முத்துக்குமார், மற்றும் உதவியாளர்கள் கால்நடைகளுக்கு செயற்கை கருவூட்டல், சுண்டு வாதம் அறுவை சிகிச்சை, குடற்புழு நீக்கம் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் விவசாயிகளுக்கு லம்பி, அம்மை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் விஜயபாஸ்கரன், துணைத் தலைவர் காந்த், உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

Tags : Vanniyar Sangam ,police veterinary camp ,Charan Kaduvetti Guru ,
× RELATED அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய...