போலீசார் விசாரணை பாபநாசம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதி

பாபநாசம், டிச.28: பாபநாசம் அருகே குண்டும், குழியுமான சாலையால் வாகனஓட்டிகள் கடும் அவதியுற்று வருகின்றனர். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் மெயின் சாலையிலிருந்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது உம்பளாப் பாடி. இந்த கிராமத்தில் ஏராளமான பொது மக்கள் வசிக்கின்றனர். கபிஸ்தலம் மெயின் சாலையிலிருந்து செல்கின்ற இந்தச் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதால் இந்தச் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போல் உம்பளாப் பாடியிலுள்ள ஆதி திராவிடர் தெருவிலுள்ள வடிகால் குளத்தை தூர் வார அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>