×

உடுமலை அரசு மருத்துவமனையை ரூ.9 கோடியில் தரம் உயர்த்த திட்ட அறிக்கை தயாரிப்பு

திருப்பூர்,டிச.28: உடுமலை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த ரூ.9 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், பெரிச்சிபாளையத்தில், தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், மருத்துவக் கல்லூரி அமைய இடம் தேர்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, மருத்துவத்துறை வசமுள்ள கட்டடங்கள் மற்றும் பணியிடங்கள், மருத்துவ கல்வி இயக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, 202122 ல், மாணவர் சேர்க்கை நடைபெறவும் உள்ளது. இதனால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், உடுமலை அரசு மருத்துவனை, தரம் உயர்த்தப்படவுள்ளது. அங்கு, கட்டமைப்பு மேம்பாட்டு பணி, மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக, கட்டிடங்கள் அமையும் இடம், வடிவமைப்பு ஆகியவை குறித்து திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை, மருத்துவ பணிகள் இயக்குனரத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.இது குறித்து மருத்துவ பணிகள் துறையினர் கூறியதாவது:

அரசு ஆணைப்படி மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி தொடங்கப்பட்டவுடன், மாவட்ட தலைமை மருத்துவமனையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அம்மாவட்டத்தில் உள்ள பெரிய நகரங்களில் மாற்றி அமைக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். அதன்படி திருப்பூர் மாவட்டத்தில், பெரிய நகரங்களாக தாராபுரம், உடுமலை நகரங்கள் உள்ளன.

 அதில், கிராம புறங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் வசிக்கக் கூடிய பகுதியாக உள்ள நகரம் என்பதால் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உடுமலைக்கு மாற்றப்பட உள்ளது. ஆனால், அதற்கான உத்தரவு, அரசிடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை. இருப்பினும், அம்மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேம்பாட்டு பணிக்காக, 9 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மருத்துவ பணிகள் இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு, பல்வேறு வசதிகளை உள்ளடக்கி, 3 மாடி கட்டிடம் அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Udumalai Government Hospital ,
× RELATED உடுமலை அரசு மருத்துவமனையில்...