திருவரங்குளம் சிவன்கோயிலில் பிரதோஷ வழிபாடு

புதுக்கோட்டை, டிச.28: திருவரங்குளம் சிவன்கோயிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்திக்கு பல்வேறு வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புகழ்வாய்ந்த சோழர் காலத்து சிவன் கோவிலில் உள்ளது இக்கோவில் மாளிகை மாத பிரதோஷ விழாவை முன்னிட்டு சிவன் சன்னதியில் உள்ள நந்தி பகவானுக்கு பால் பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது மலர் அலங்காரம் செய்தி சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மூலஸ்தானத்தில் உள்ள சுயம்பு லிங்க சிவலிங்கம் பெரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு நந்தி பகவானுக்கு மகா தீபம் காட்டப்பட்டது. இதேபோல் திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் மங்கள நாயகி அம்பாள் கோவில், திருவுடையார்பட்டி திருமூலநாதர் திரிபுரசுந்தரி கோயில், திருமலை யாய சமுத்திரம் திருக்காமேஸ்வரர் கதிர்காம சுவாமி அம்பாள் கோவில் ஆகிய கோயில்களில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>