மணல் கடத்திய 2 பேர் கைது

பொன்னமராவதி, டிச.28: பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அம்மாபட்டி வழியாக மணல் கடத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர் பொன்னமராவதி அருகே உள்ள மேலத்தானியம் அம்மாபட்டி விளக்கு ரோட்டின் வழியாக மணல் கடத்தி செல்லப்படுவதாக காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பேரில் காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்வாசகன் தலைமையிலான போலீசார் அம்மாபட்டி விளக்கு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிப்பர் லாரியை ஓட்டிவந்த விளாம்பட்டி வெள்ளைச்சாமி மகன் மூர்த்தி என்பவரையும், டிப்பர் லாரியின் உரிமையாளர் சீகம்பட்டி நல்லையா மகன் கருப்பையா ஆகியோரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து காரையூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எடுத்துச் சென்றனர்.

Related Stories:

>