ஆளில்லாத வீட்டில் திருட முயற்சி சத்தம் கேட்டு வந்தவரை பிடித்து கட்டிப்போட்டு வீட்டில் கைவரிசை

புதுக்கோட்டை, டிச.28: கீரனூர் அருகே ஆளில்லாத வீட்டில் திருட முயன்ற சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரரை திருடர்கள் வாயையும், கையையும் கட்டிப்போட்டு அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று பீரோவை உடைத்து ரூ.,2000 மற்றும் பொருட்களை திருடிக்கொண்டு தப்பியோடி விட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள கூத்தாடிபாறையை சேர்ந்தவர் சுகுமார் (45), இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் சுகுமார் வீட்டை மர்ம நபர்கள் உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அதே ஊரை சேர்ந்த ரவி என்பவர் வந்து பார்க்க வந்தார். இதனைக் கண்ட திருடர்கள் ரவியிடம் கத்தியை காட்டியவுடன் ரவி கத்தியை பிடிக்க முற்பட்டுள்ளார். இதில் ரவிக்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் அவர் சத்தம் போடாமல் இருக்க வாயில் துணி வைத்து கட்டியும் கைகளை ஒயரால் கட்டி உட்கார வைத்தும் வீட்டின் உள்ளே உள்ள பீரோவை உடைத்துள்ளனர். அதில் இருந்த பொருட்கள் விபரம் தெரியவில்லை. வீட்டு உரிமையாளர் ஈரோட்டில் உள்ளார். பின்னர் ரவிவை அவரது வீட்டிற்கு கொண்டு சென்று அவரது பீரோவை உடைத்து அங்கிருந்த ரூ.2,000, காசி தவளை 1, செல்போன் 1, டார்ச் லைட் 1 ஆகியவைகளை எடுத்துக் கொண்டு வெளியில் நின்ற காரில் திருடர்கள் மூன்று நபர்களும் ஏறி கீரனூர் நோக்கி சென்று விட்டனர். இது குறித்து கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>