×

பிரம்மபுரீஸ்வர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகரத்திற்கு இடம் பெயர்ந்தார்

பெரம்பலூர்,டிச.28: பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சனிப் பெயர்ச்சி விழா நடந்தது. இதில் சனிபகவான் தனுசு ராசியிலிரு ந்து மகர ராசிக்கு அதிகா லை இடம் பெயர்ந்தார். சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் சஞ்சரிப்பார். பின்னர் மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆவார். இதையே சனிப்பெயர்ச்சி என கூறப்படுகிறது. பஞ்சாங்கப்படி சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு நேற்று (27ம்தேதி) அதிகாலை 5.22மணிக்கு இடம் பெயர்ந்தார். இதன்படி பெரம்பலூர் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோ விலில் சனிபெயர்ச்சிவிழா சிறப்பாக நடைபெற்றது.

இதனையொட்டி நவக் கிரகங்களில் எழுந்தருளியிருக்கும்  சனிஸ்வர பகவா னுக்கு அதிகாலை 2.30 மணிக்கு விநாயகர் பூஜை, கலச அர்ச்சனை, பூர்ணா ஹூதி நடந்தது. 3 மணிக்கு யாக சாலையுடன் பூஜைகள் ஆரம்பித்து சிறப்பு அபி ஷேகம் செய்து, சரியாக 5.22 மணிக்கு மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப் பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் குருக்கள் சாமிநாத சிவாச்சாரியார், உதவி குருக்கள் கவுரி சங்கர் செய்திருந்தனர். மார்கழி மாத வழிபாட்டுக் குழு தலைவர் ராமலிங்கம், முன்னாள் வர்த்தகர் சங்கச் செயலாளர் பழனியப்பன், முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வ ரன் என உபயதாரர்கள், முக்கிய பிரமுகர்கள் மட்டுமே சமூக இடை வெளிவி ட்டு கலந்து கொண்டனர். காலை 8 மணிக்கு முகக் கவசங்களுடன் இடைவெளி விட்டுவிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தங்கள் பரிகாரத்திற்காக சனீஸ் வர பகவானை பய பக்தி யுடன் தரிசித்து வழிபட்டுச் சென்றனர்.

இதேபோல் வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, கிபி 9ம் நூற்றா ண்டில் பராந்தகச் சோழன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட, அருள்மிகு வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் திருக் கோவிலிலும் சனிப் பெயர்ச்சி விழா நடைபெற்றது. பூஜைகளை கோவில் குரு க்கள்கள் ஜெயச்சந்திரன், குமார், செல்லப்பா ஆகியோர் முன்னின்று நடத்தினர். கொரோனா பரவல் தடைக்காக பக்தர்கள் வரு கைக்கு தடைவிதிக்கப் பட் டிருந்தது. மேலும் பெரம்ப லூர் மாவட்டத்தில் நவக்கி ரக வழிபாடுகள் கொண்ட சிவன் கோயில்களில் நேற்று சனிப்பெயர்ச்சி நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags : Saturn ,Brahmapuriswara Temple ,
× RELATED மங்களம் பொங்கும் பங்குனி மாதம்!