×

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவைப் பணி இன்று துவக்கம்

பெரம்பலூர், டிச.28: பெரம்ப லூர் சர்க்கரை ஆலையின் 43வது அரவைப்பணியை கலெக்டர் வெங்கட பிரியா இன்று தொடங்கி வைக்கிறார். இதில் 2.2லட்சம் டன் கரும்பு அரைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் ஊராட்சியில் கடந்த 1978ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை தொடங்கப்பட் டது. இந்த சர்க்கரை ஆலை யில் விவசாயிகளும், தமிழக அரசும் இணைந்து பங் குதாரர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை ஆலையின் 2020-2021ம் ஆண்டுக்கான 43வது அரவைப் பருவம் இன்று (28ம்தேதி) தொடங்குகிறது. சர்க்கரை ஆலையி ன் தலைமை நிர்வாகி முகம்மதுஅஸ்லாம் முன்னிலையில், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா கலந்து கொண்டு காலை 9.30 மணிக்கு அரவைப் பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த சர்க்கரை ஆலைக்காக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெரம்பலூர், எறையூர், வி.களத்தூர், லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், புதுவேட்டக்குடி, கிருஷ்ணாபுரம், தாமரைப் பூண்டி ஆகிய 8 கரும்புக் கோட்டங்களில் இருந்து நடப்பாண்டு சுமார் 4 ஆயிரம் கரும்பு விவசாயிகளால் 7,240ஏக்கரில் பயிரிடப்பட் டு பதிவுசெய்யப்பட்ட 2லட்சத்து 2,000 டன் கரும்புகள் அரவைக்காக எடுத்துக் கொள்ளப்படுகிறது. 20 ஆயிரம் டன் கரும்பு வெளி ஆலைகளில் இருந்து பெறுவது எனவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. அரவைப்பணிகள் தொடக் கவிழாவில் வேப்பந்தட்டை தாசில்தார், கிருஷ்ணராஜ், தலைமைக்கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணை தலைமை ரசாயணர் மாத வன், துணை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன், கணக்கு அலுவலர் ஜான்பிரீட்டோ, தொழிலாளர் நலஅலுவலர் ராஜா மணி, வருவாய் ஆய்வாளர் தங்கமணி மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்க உ ள்ளனர்.

Tags : Perambalur Sugar Mill ,
× RELATED பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணி