கார் மீது கல்வீசி தாக்குதல்

கோவை, டிச.28: கோவை ஆர்.எஸ்.புரம் லாலி ரோட்டை சேர்ந்தவர் ஞானவேல் (35). போட்டோகிராபர். பெரியாரின் கொள்கையில் ஈடுபாடு ெகாண்ட இவர் தனது காரில் பெரியார் படம், கருத்துக்களை எழுதி வைத்திருந்தார். நேற்று முன் தினம் இவர் தனது காரில் லாலி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது கார் மீது 2 பேர்  கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காரின் கண்ணாடி உடைந்து சிதறியது. இது தொடர்பாக ஞானவேல் கல் வீசிய நபர்களை மடக்கி பிடித்தார். அப்போது அவர்கள் பெரியார் குறித்து அவமரியாதையாக பேசியுள்ளனர். மேலும் அவரிடம் வாக்குவாதம் செய்து பெரியார் படம் இருந்தால் அப்படி தான் தாக்குவோம் எனக்கூறி மீண்டும் கார் மீது கல் வீசினர். கண்ணாடிகளை உடைத்தனர். இது தொடர்பாக ஞானவேல் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>