×

சனி பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம்

பொள்ளாச்சி, டிச.28: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து, மகர ராசிக்கு நேற்று அதிகாலை 5.22 மணிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து, பொள்ளாச்சியில் பல்வேறு இடங்களில் சனிஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் யாக வேள்வி நடைபெற்றது. இதில் பொள்ளாச்சி ஜோதிநகர் விவேகானந்தா கலை மற்றும் நற்பணி மன்றம் சார்பில், சிறப்பு யாக பூஜை நடந்தது. தலைவர் மயில்சாமி, ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயலாளர் ரகுபதி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

அதிகாலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சியும், மகா சங்கல்ப ஹோமமும் நடைபெற்றது. 5.22மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம்பெயர்ந்த நேரத்தில், மஹா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், குடும்பத்தினருடன் கலந்து பொதுமக்கள், பரிகார பூஜைகள் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு பிரம்மாண்ட வடிவிலான சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில், சனீஸ்வரன் அருள்பாலித்தார். கொரோனா அச்சம் காரணமாக, சனிப்பெயர்ச்சி நேரத்தில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED கோவையில் இன்று வைகோ பிரசாரம்